Saturday, January 29, 2011

     இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிழக்கின் புகழ் வாய்ந்த தமிழரின் ஆட்சிப் பிரதேசமா விளங்கியது இன்று மாட்டுப்பளை, செங்கற்படை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயப்பகுதி.
    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னான "வன்னியராச சிங்கன்" சிங்காபுரியை இராஜதானியாக கொண்டு இப் பகுதி முழுவதையும் அரசாட்சி செய்தான் இறைபக்தி உள்ள இம் மன்னன் பல கோவில்களைக் கட்டியெழுப்பினான் அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீ மடத்து மீனாட்சி அம்மன் ஆலயம்.
    சரித்திர முக்கியத்துவம் வாய்த தமிழரின் இவ் ஆலயம் தமிழர்களின் கண் முன்னால் சிதைவடைந்து செல்கின்றது இவ் ஆலயம் இலங்கை அரசின் கீழ் பதியப்பட்டாலும் இன்றுவரை அரசினால் எவ்வித உதவியும் கிடைக்காமல் சிதைவடைந்து செல்கிறது கண்கூடு.
    1990 இனக்கலவரத்தின் போது கோயிலின் பெரும் பகுதி சிதைக்கப்பட்டு மண்டபம் உடைத்து நொறுக்கப்பட்டது ,சிறிது காலத்திற்கு முன்பு கூட 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த கோயில் தற்போது 7 ஏக்கராக சுருங்கி விட்டது. கோயிலுக்கான நெல் வயல்கள் பிற இனத்தவரால் கைப்பெற்றப்பட்டு செய்கை பண்ணப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கோயில் காணியும் கொஞ்சம் கொஞ்மாக கைப்பெற்றப்பட்டு வருகின்றது.
  
முன்பு சோலையாக காணப்பட்ட இவ்விடம் இன்று செல்வதற்கு போதிய பாதை வசதி கூட இல்லாமல் ஓர் ஒற்றையடி பாதை மாத்திரமே எஞ்சிய நிலையில் காணப்படுகிறது.

    இக் கோயிலில் வெள்ளிதோறும் நடைபெறும் பூசையைக் கண்பதற்காக திராய்க்கேணி, மல்வத்தை, வளத்தாம்பிட்டி சம்மாந்துறை,காரைதீவு,தம்பிலுவில்,ஆலையடிவேம்பு, கோளாவில், வீரமுனை,அக்கரைப்பற்று எனப் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வர்.
    செழிப்பாக இருந்த ஆலயப்பிரதேசம் இன்று சோகத்தை அப்பிக்கொண்டிருக்கின்றது. ஆலய வளவில் மட்டும் சுமார் 200 தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு ஏனயை தாவரங்களும் இராசாயன எண்ணை போட்டு கருக்கப்பட்டுள்ளன.
    இத்தனை நடந்தும் கேட்பாரற்று ஒரு வரலாற்று நிகழ்வு அனாதயாக சிறைபட்டுள்ளது. மக்களுக்கான பிரதிநிதிகளோ, தலைவர்களோ, அரசாங்கமோ இது பற்றி அக்கறை காட்டுவதாக தெரியவில்லை ஊமையாய் அழிந்துகொண்டிருக்கும் இந்த சோலைப் புதையல் மீட்கப்படுமா? என்ற ஏக்கத்துடன் தமிழர்ககளின் பொக்கித்தை மீட்க தமிழ் உணர்வோடு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இதைச் சமர்ப்பிக்கின்றோம்.

இவ்வண்ணம் ஆலய பரிபாலன சபையினார்

நன்றி
                                                    

0 comments:

Post a Comment