Sunday, May 13, 2012

அலைமோதிய பக்தர் கூட்டம்

எம் அம்பாளின் அதிசயங்களை கண்ணுற்று எம் அம்பாள் ஆலயத்திற்கு நித்தம் பக்தர்களின் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.  















அம்பாளின் அதிசயம்..


எம் அம்மன் ஆலயத்தின் வடக்கு வாசல் பக்கம் அமைந்திருந்த பாம்பு புற்றில் இருந்து சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது
மேலும் அக்கரைப்பற்றை சேர்ந்த கா.மல்லிகா என்ற பெண்ணின் கனவில் மீனாட்சி அம்மன் தோன்றி அம்மன் ஆலயத்தின் வடக்கு வாசல் பக்கம் பாம்பு புற்றில் சிவலிங்கம் ஒன்று இருப்பதாகஅம்மன் அருள்வாக்கு கூறி மறைந்துள்ளார்.இதனை குடைசாமி சித்தரின் உதவியுடன் பாம்பு புற்றில் இருந்து வெளியே சிவலிங்கம் ஒன்று எடுக்கப்பட்டு மக்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள்து.













                                                                                    நன்றி -  http://www.karaitivu.org

Tuesday, February 28, 2012

அம்மனின் கட்டிட வேலைகள் ஆரம்பம்

மடத்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய புதிய கட்டிட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும்  போதிய நிதி வசதி இல்லதா காரணத்தினால் கட்டிட வேலைகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது. அடியார்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் ... தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி எம் அம்மன் கட்டிட நிதிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  -   நிர்வாகம் 







Saturday, August 13, 2011

கௌரவிப்பு

மடத்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலையத்தின் பூசகர் அவர்கள் பூசகர்களுக்காக இந்து சமய கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட பயிற்சி நெறியினை வெற்றிகரமாக முடித்ததனை கௌரவிக்கும் முகமாக இந்து சமய கலாசரா உத்தியோகத்தர் திரு. குணநாயகம் அவர்களால் பொன்னாடை போர்த்தி ஆலய முன்றலில்  கௌரவிக்கப்பட்டார்.



Saturday, June 18, 2011

நன்றிகள்

Clipart

மடத்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு நீர்க் குழாய் வசதி ஏற்படுத்தி தந்த அடியார்க்கு  எமது மனாமர்ந்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-நன்றி-
ஆலய பரிபாலன சபையினர்

17/06/2011 வெள்ளிக்கிழமை பூசை நிகழ்வு

 ஆலய பரிபாலன சபையினரின் வேண்டுகோளுக்கு அமைய இவ் வௌ்ளிக்கிழமை பூசையானது பி.ப 1.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.